1	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. "
2	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். "
3	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். "
4	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. "
5	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. "
6	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். "
7	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. "
8	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. "
9	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. "
10	"அறத்துப்பால்"	"கடவுள் வாழ்த்து"	"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். "
11	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. "
12	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. "
13	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. "
14	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். "
15	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. "
16	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. "
17	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். "
18	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. "
19	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். "
20	"அறத்துப்பால்"	"வான்சிறப்பு"	"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. "
21	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. "
22	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. "
23	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. "
24	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. "
25	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. "
26	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். "
27	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. "
28	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். "
29	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. "
30	"அறத்துப்பால்"	"நீத்தார் பெருமை"	"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். "
31	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. "
32	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. "
33	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். "
34	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. "
35	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். "
36	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. "
37	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. "
38	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். "
39	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. "
40	"அறத்துப்பால்"	"அறன்வலியுறுத்தல்"	"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. "
41	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. "
42	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை. "
43	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. "
44	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். "
45	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. "
46	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். "
47	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. "
48	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. "
49	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. "
50	"அறத்துப்பால்"	"இல்வாழ்க்கை"	"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். "
51	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. "
52	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். "
53	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. "
54	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். "
55	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. "
56	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். "
57	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. "
58	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. "
59	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. "
60	"அறத்துப்பால்"	"வாழ்க்கைத் துணைநலம்"	"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. "
61	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. "
62	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். "
63	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். "
64	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். "
65	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. "
66	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். "
67	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். "
68	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. "
69	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். "
70	"அறத்துப்பால்"	"புதல்வரைப் பெறுதல்"	"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். "
71	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். "
72	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. "
73	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. "
74	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

75	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. "
76	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. "
77	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். "
78	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. "
79	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. "
80	"அறத்துப்பால்"	"அன்புடைமை"	"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. "
81	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. "
82	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. "
83	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. "
84	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். "
85	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். "
86	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. "
87	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். "
88	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். "
89	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. "
90	"அறத்துப்பால்"	"விருந்தோம்பல்"	"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. "
91	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். "
92	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். "
93	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். "
94	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. "
95	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. "
96	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் "
97	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். "
98	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். "
99	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. "
100	"அறத்துப்பால்"	"இனியவைகூறல்"	"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. "
101	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. "
102	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. "
103	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. "
104	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். "
105	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. "
106	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. "
107	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. "
108	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. "
109	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். "
110	"அறத்துப்பால்"	"செய்ந்நன்றி அறிதல்"	"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. "
111	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். "
112	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. "
113	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். "
114	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். "
115	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. "
116	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். "
117	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. "
118	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. "
119	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். "
120	"அறத்துப்பால்"	"நடுவு நிலைமை"	"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். "
121	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். "
122	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. "
123	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். "
124	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. "
125	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. "
126	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. "
127	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. "
128	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். "
129	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. "
130	"அறத்துப்பால்"	"அடக்கமுடைமை"	"கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. "
131	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். "
132	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. "
133	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். "
134	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். "
135	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. "
136	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. "
137	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. "
138	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். "
139	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். "
140	"அறத்துப்பால்"	"ஒழுக்கமுடைமை"	"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் "
141	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். "
142	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். "
143	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். "
144	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். "
145	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. "
146	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். "
147	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். "
148	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. "
149	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். "
150	"அறத்துப்பால்"	"பிறனில் விழையாமை"	"அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. "
151	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. "
152	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. "
153	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. "
154	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். "
155	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. "
156	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். "
157	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. "
158	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். "
159	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். "
160	"அறத்துப்பால்"	"பொறையுடைமை"	"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். "
161	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. "
162	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். "
163	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். "
164	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. "
165	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. "
166	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். "
167	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். "
168	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். "
169	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். "
170	"அறத்துப்பால்"	"அழுக்காறாமை"	"அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். "
171	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். "
172	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். "
173	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். "
174	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். "
175	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். "
176	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். "
177	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். "
178	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். "
179	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. "
180	"அறத்துப்பால்"	"வெஃகாமை"	"இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. "
181	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. "
182	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. "
183	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். "
184	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். "
185	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். "
186	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். "
187	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். "
188	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. "
189	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. "
190	"அறத்துப்பால்"	"புறங்கூறாமை"	"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. "
191	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். "
192	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. "
193	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. "
194	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. "
195	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். "
196	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். "
197	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. "
198	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். "
199	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். "
200	"அறத்துப்பால்"	"பயனில சொல்லாமை"	"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். "
201	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. "
202	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். "
203	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். "
204	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. "
205	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. "
206	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். "
207	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். "
208	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. "
209	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். "
210	"அறத்துப்பால்"	"தீவினையச்சம்"	"அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். "
211	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. "
212	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. "
213	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. "
214	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். "
215	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. "
216	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். "
217	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். "
218	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். "
219	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. "
220	"அறத்துப்பால்"	"ஒப்புரவறிதல்"	"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. "
221	"அறத்துப்பால்"	"ஈகை"	"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. "
222	"அறத்துப்பால்"	"ஈகை"	"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. "
223	"அறத்துப்பால்"	"ஈகை"	"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. "
224	"அறத்துப்பால்"	"ஈகை"	"இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. "
225	"அறத்துப்பால்"	"ஈகை"	"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். "
226	"அறத்துப்பால்"	"ஈகை"	"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. "
227	"அறத்துப்பால்"	"ஈகை"	"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. "
228	"அறத்துப்பால்"	"ஈகை"	"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். "
229	"அறத்துப்பால்"	"ஈகை"	"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். "
230	"அறத்துப்பால்"	"ஈகை"	"சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. "
231	"அறத்துப்பால்"	"புகழ்"	"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. "
232	"அறத்துப்பால்"	"புகழ்"	"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். "
233	"அறத்துப்பால்"	"புகழ்"	"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். "
234	"அறத்துப்பால்"	"புகழ்"	"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. "
235	"அறத்துப்பால்"	"புகழ்"	"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. "
236	"அறத்துப்பால்"	"புகழ்"	"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. "
237	"அறத்துப்பால்"	"புகழ்"	"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். "
238	"அறத்துப்பால்"	"புகழ்"	"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். "
239	"அறத்துப்பால்"	"புகழ்"	"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். "
240	"அறத்துப்பால்"	"புகழ்"	"வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். "
241	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. "
242	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை. "
243	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். "
244	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. "
245	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. "
246	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். "
247	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. "
248	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. "
249	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். "
250	"அறத்துப்பால்"	"அருளுடைமை"	"வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. "
251	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். "
252	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. "
253	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். "
254	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். "
255	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. "
256	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். "
257	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். "
258	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். "
259	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. "
260	"அறத்துப்பால்"	"புலான்மறுத்தல்"	"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். "
261	"அறத்துப்பால்"	"தவம்"	"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. "
262	"அறத்துப்பால்"	"தவம்"	"தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. "
263	"அறத்துப்பால்"	"தவம்"	"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். "
264	"அறத்துப்பால்"	"தவம்"	"ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். "
265	"அறத்துப்பால்"	"தவம்"	"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். "
266	"அறத்துப்பால்"	"தவம்"	"தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. "
267	"அறத்துப்பால்"	"தவம்"	"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. "
268	"அறத்துப்பால்"	"தவம்"	"தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். "
269	"அறத்துப்பால்"	"தவம்"	"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். "
270	"அறத்துப்பால்"	"தவம்"	"இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். "
271	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். "
272	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். "
273	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. "
274	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. "
275	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். "
276	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். "
277	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து. "
278	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். "
279	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். "
280	"அறத்துப்பால்"	"கூடாவொழுக்கம்"	"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். "
281	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. "
282	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். "
283	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். "
284	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். "
285	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். "
286	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். "
287	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். "
288	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. "
289	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். "
290	"அறத்துப்பால்"	"கள்ளாமை"	"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. "
291	"அறத்துப்பால்"	"வாய்மை"	"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். "
292	"அறத்துப்பால்"	"வாய்மை"	"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். "
293	"அறத்துப்பால்"	"வாய்மை"	"தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். "
294	"அறத்துப்பால்"	"வாய்மை"	"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். "
295	"அறத்துப்பால்"	"வாய்மை"	"மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. "
296	"அறத்துப்பால்"	"வாய்மை"	"பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். "
297	"அறத்துப்பால்"	"வாய்மை"	"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. "
298	"அறத்துப்பால்"	"வாய்மை"	"புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். "
299	"அறத்துப்பால்"	"வாய்மை"	"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. "
300	"அறத்துப்பால்"	"வாய்மை"	"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. "
301	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா "
302	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. "
303	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். "
304	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. "
305	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். "
306	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். "
307	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. "
308	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. "
309	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். "
310	"அறத்துப்பால்"	"வெகுளாமை"	"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. "
311	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். "
312	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். "
313	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். "
314	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். "
315	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. "
316	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். "
317	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. "
318	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். "
319	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். "
320	"அறத்துப்பால்"	"இன்னாசெய்யாமை"	"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். "
321	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். "
322	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. "
323	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. "
324	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. "
325	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. "
326	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. "
327	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. "
328	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. "
329	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. "
330	"அறத்துப்பால்"	"கொல்லாமை"	"உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
யவர். "
331	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. "
332	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. "
333	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். "
334	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். "
335	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் "
336	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. "
337	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. "
338	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. "
339	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. "
340	"அறத்துப்பால்"	"நிலையாமை"	"புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. "
341	"அறத்துப்பால்"	"துறவு"	"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். "
342	"அறத்துப்பால்"	"துறவு"	"வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. "
343	"அறத்துப்பால்"	"துறவு"	"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. "
344	"அறத்துப்பால்"	"துறவு"	"இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. "
345	"அறத்துப்பால்"	"துறவு"	"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. "
346	"அறத்துப்பால்"	"துறவு"	"யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
புகும். "
347	"அறத்துப்பால்"	"துறவு"	"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. "
348	"அறத்துப்பால்"	"துறவு"	"தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். "
349	"அறத்துப்பால்"	"துறவு"	"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். "
350	"அறத்துப்பால்"	"துறவு"	"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. "
351	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. "
352	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. "
353	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. "
354	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. "
355	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. "
356	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. "
357	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. "
358	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. "
359	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். "
360	"அறத்துப்பால்"	"மெய்யுணர்தல்"	"காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். "
361	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. "
362	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். "
363	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். "
364	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். "
365	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். "
366	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. "
367	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். "
368	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். "
369	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். "
370	"அறத்துப்பால்"	"அவாவறுத்தல்"	"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். "
371	"அறத்துப்பால்"	"ஊழ்"	"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. "
372	"அறத்துப்பால்"	"ஊழ்"	"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. "
373	"அறத்துப்பால்"	"ஊழ்"	"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். "
374	"அறத்துப்பால்"	"ஊழ்"	"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. "
375	"அறத்துப்பால்"	"ஊழ்"	"நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. "
376	"அறத்துப்பால்"	"ஊழ்"	"பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. "
377	"அறத்துப்பால்"	"ஊழ்"	"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. "
378	"அறத்துப்பால்"	"ஊழ்"	"துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். "
379	"அறத்துப்பால்"	"ஊழ்"	"நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். "
380	"அறத்துப்பால்"	"ஊழ்"	"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். "
381	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. "
382	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. "
383	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. "
384	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. "
385	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. "
386	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் "
387	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. "
388	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். "
389	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. "
390	"பொருட்பால்"	"இறைமாட்சி"	"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. "
391	"பொருட்பால்"	"கல்வி"	"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. "
392	"பொருட்பால்"	"கல்வி"	"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. "
393	"பொருட்பால்"	"கல்வி"	"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். "
394	"பொருட்பால்"	"கல்வி"	"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். "
395	"பொருட்பால்"	"கல்வி"	"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். "
396	"பொருட்பால்"	"கல்வி"	"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. "
397	"பொருட்பால்"	"கல்வி"	"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. "
398	"பொருட்பால்"	"கல்வி"	"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. "
399	"பொருட்பால்"	"கல்வி"	"தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். "
400	"பொருட்பால்"	"கல்வி"	"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. "
401	"பொருட்பால்"	"கல்லாமை"	"அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். "
402	"பொருட்பால்"	"கல்லாமை"	"கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. "
403	"பொருட்பால்"	"கல்லாமை"	"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். "
404	"பொருட்பால்"	"கல்லாமை"	"கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். "
405	"பொருட்பால்"	"கல்லாமை"	"கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். "
406	"பொருட்பால்"	"கல்லாமை"	"உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். "
407	"பொருட்பால்"	"கல்லாமை"	"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. "
408	"பொருட்பால்"	"கல்லாமை"	"நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. "
409	"பொருட்பால்"	"கல்லாமை"	"மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. "
410	"பொருட்பால்"	"கல்லாமை"	"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். "
411	"பொருட்பால்"	"கேள்வி"	"செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. "
412	"பொருட்பால்"	"கேள்வி"	"செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். "
413	"பொருட்பால்"	"கேள்வி"	"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. "
414	"பொருட்பால்"	"கேள்வி"	"கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. "
415	"பொருட்பால்"	"கேள்வி"	"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். "
416	"பொருட்பால்"	"கேள்வி"	"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். "
417	"பொருட்பால்"	"கேள்வி"	"பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். "
418	"பொருட்பால்"	"கேள்வி"	"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. "
419	"பொருட்பால்"	"கேள்வி"	"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. "
420	"பொருட்பால்"	"கேள்வி"	"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். "
421	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். "
422	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. "
423	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. "
424	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. "
425	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. "
426	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. "
427	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். "
428	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். "
429	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "
430	"பொருட்பால்"	"அறிவுடைமை"	"அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். "
431	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. "
432	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. "
433	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். "
434	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. "
435	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். "
436	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. "
437	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். "
438	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. "
439	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. "
440	"பொருட்பால்"	"குற்றங்கடிதல்"	"காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். "
441	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். "
442	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். "
443	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். "
444	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. "
445	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். "
446	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். "
447	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். "
448	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். "
449	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. "
450	"பொருட்பால்"	"பெரியாரைத் துணைக்கோடல்"	"பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். "
451	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். "
452	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. "
453	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். "
454	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. "
455	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். "
456	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. "
457	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். "
458	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. "
459	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. "
460	"பொருட்பால்"	"சிற்றினஞ்சேராமை"	"நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். "
461	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். "
462	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். "
463	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். "
464	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். "
465	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. "
466	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். "
467	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. "
468	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். "
469	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. "
470	"பொருட்பால்"	"தெரிந்துசெயல்வகை"	"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. "
471	"பொருட்பால்"	"வலியறிதல்"	"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். "
472	"பொருட்பால்"	"வலியறிதல்"	"ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். "
473	"பொருட்பால்"	"வலியறிதல்"	"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். "
474	"பொருட்பால்"	"வலியறிதல்"	"அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். "
475	"பொருட்பால்"	"வலியறிதல்"	"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். "
476	"பொருட்பால்"	"வலியறிதல்"	"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். "
477	"பொருட்பால்"	"வலியறிதல்"	"ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. "
478	"பொருட்பால்"	"வலியறிதல்"	"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. "
479	"பொருட்பால்"	"வலியறிதல்"	"அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். "
480	"பொருட்பால்"	"வலியறிதல்"	"உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். "
481	"பொருட்பால்"	"காலமறிதல்"	"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. "
482	"பொருட்பால்"	"காலமறிதல்"	"பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. "
483	"பொருட்பால்"	"காலமறிதல்"	"அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின். "
484	"பொருட்பால்"	"காலமறிதல்"	"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். "
485	"பொருட்பால்"	"காலமறிதல்"	"காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். "
486	"பொருட்பால்"	"காலமறிதல்"	"ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. "
487	"பொருட்பால்"	"காலமறிதல்"	"பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். "
488	"பொருட்பால்"	"காலமறிதல்"	"செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. "
489	"பொருட்பால்"	"காலமறிதல்"	"எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். "
490	"பொருட்பால்"	"காலமறிதல்"	"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. "
491	"பொருட்பால்"	"இடனறிதல்"	"தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. "
492	"பொருட்பால்"	"இடனறிதல்"	"முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். "
493	"பொருட்பால்"	"இடனறிதல்"	"ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். "
494	"பொருட்பால்"	"இடனறிதல்"	"எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். "
495	"பொருட்பால்"	"இடனறிதல்"	"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. "
496	"பொருட்பால்"	"இடனறிதல்"	"கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. "
497	"பொருட்பால்"	"இடனறிதல்"	"அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். "
498	"பொருட்பால்"	"இடனறிதல்"	"சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். "
499	"பொருட்பால்"	"இடனறிதல்"	"சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. "
500	"பொருட்பால்"	"இடனறிதல்"	"காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. "
501	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். "
502	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. "
503	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. "
504	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். "
505	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். "
506	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. "
507	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். "
508	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். "
509	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். "
510	"பொருட்பால்"	"தெரிந்துதெளிதல்"	"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். "
511	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். "
512	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. "
513	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. "
514	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். "
515	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. "
516	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். "
517	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். "
518	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். "
519	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. "
520	"பொருட்பால்"	"தெரிந்துவினையாடல்"	"நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. "
521	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. "
522	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். "
523	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. "
524	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். "
525	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். "
526	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். "
527	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. "
528	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். "
529	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். "
530	"பொருட்பால்"	"சுற்றந்தழால்"	"உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். "
531	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. "
532	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. "
533	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. "
534	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. "
535	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். "
536	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். "
537	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். "
538	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். "
539	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. "
540	"பொருட்பால்"	"பொச்சாவாமை"	"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். "
541	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. "
542	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. "
543	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். "
544	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. "
545	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. "
546	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். "
547	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். "
548	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். "
549	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். "
550	"பொருட்பால்"	"செங்கோன்மை"	"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். "
551	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. "
552	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. "
553	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். "
554	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. "
555	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை "
556	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. "
557	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. "
558	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். "
559	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். "
560	"பொருட்பால்"	"கொடுங்கோன்மை"	"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். "
561	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. "
562	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். "
563	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். "
564	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். "
565	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. "
566	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். "
567	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். "
568	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. "
569	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். "
570	"பொருட்பால்"	"வெருவந்தசெய்யாமை"	"கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. "
571	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. "
572	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. "
573	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். "
574	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். "
575	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் "
576	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். "
577	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். "
578	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. "
579	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. "
580	"பொருட்பால்"	"கண்ணோட்டம்"	"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். "
581	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். "
582	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். "
583	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். "
584	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. "
585	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. "
586	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. "
587	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. "
588	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். "
589	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். "
590	"பொருட்பால்"	"ஒற்றாடல்"	"சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. "
591	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. "
592	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். "
593	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். "
594	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. "
595	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. "
596	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. "
597	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. "
598	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. "
599	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
஦வ்ருஉம் புலிதாக் குறின். "
600	"பொருட்பால்"	"ஊக்கமுடைமை"	"உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. "
601	"பொருட்பால்"	"மடியின்மை"	"குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். "
602	"பொருட்பால்"	"மடியின்மை"	"மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். "
603	"பொருட்பால்"	"மடியின்மை"	"மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. "
604	"பொருட்பால்"	"மடியின்மை"	"குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. "
605	"பொருட்பால்"	"மடியின்மை"	"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். "
606	"பொருட்பால்"	"மடியின்மை"	"படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. "
607	"பொருட்பால்"	"மடியின்மை"	"இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். "
608	"பொருட்பால்"	"மடியின்மை"	"மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். "
609	"பொருட்பால்"	"மடியின்மை"	"குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். "
610	"பொருட்பால்"	"மடியின்மை"	"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. "
611	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். "
612	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. "
613	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. "
614	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். "
615	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். "
616	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். "
617	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். "
618	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. "
619	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "
620	"பொருட்பால்"	"ஆள்வினையுடைமை"	"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். "
621	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். "
622	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். "
623	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். "
624	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. "
625	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். "
626	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். "
627	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். "
628	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். "
629	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். "
630	"பொருட்பால்"	"இடுக்கணழியாமை"	"இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. "
631	"பொருட்பால்"	"அமைச்சு"	"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. "
632	"பொருட்பால்"	"அமைச்சு"	"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. "
633	"பொருட்பால்"	"அமைச்சு"	"பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. "
634	"பொருட்பால்"	"அமைச்சு"	"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. "
635	"பொருட்பால்"	"அமைச்சு"	"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. "
636	"பொருட்பால்"	"அமைச்சு"	"மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. "
637	"பொருட்பால்"	"அமைச்சு"	"செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். "
638	"பொருட்பால்"	"அமைச்சு"	"அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். "
639	"பொருட்பால்"	"அமைச்சு"	"பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். "
640	"பொருட்பால்"	"அமைச்சு"	"முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். "
641	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. "
642	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. "
643	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். "
644	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். "
645	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. "
646	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். "
647	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. "
648	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். "
649	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். "
650	"பொருட்பால்"	"சொல்வன்மை"	"இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். "
651	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். "
652	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. "
653	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். "
654	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். "
655	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. "
656	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. "
657	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. "
658	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். "
659	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. "
660	"பொருட்பால்"	"வினைத்தூய்மை"	"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. "
661	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. "
662	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். "
663	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். "
664	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். "
665	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். "
666	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். "
667	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. "
668	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். "
669	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. "
670	"பொருட்பால்"	"வினைத்திட்பம்"	"எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. "
671	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. "
672	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. "
673	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். "
674	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். "
675	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். "
676	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். "
677	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். "
678	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. "
679	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். "
680	"பொருட்பால்"	"வினைசெயல்வகை"	"உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. "
681	"பொருட்பால்"	"தூது"	"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. "
682	"பொருட்பால்"	"தூது"	"அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. "
683	"பொருட்பால்"	"தூது"	"நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. "
684	"பொருட்பால்"	"தூது"	"அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. "
685	"பொருட்பால்"	"தூது"	"தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. "
686	"பொருட்பால்"	"தூது"	"கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. "
687	"பொருட்பால்"	"தூது"	"கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. "
688	"பொருட்பால்"	"தூது"	"தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. "
689	"பொருட்பால்"	"தூது"	"விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். "
690	"பொருட்பால்"	"தூது"	"இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. "
691	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். "
692	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். "
693	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. "
694	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. "
695	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. "
696	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். "
697	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். "
698	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். "
699	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். "
700	"பொருட்பால்"	"மன்னரைச் சேர்ந்தொழுதல்"	"பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். "
701	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. "
702	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். "
703	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். "
704	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. "
705	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். "
706	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். "
707	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். "
708	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். "
709	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். "
710	"பொருட்பால்"	"குறிப்பறிதல்"	"நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. "
711	"பொருட்பால்"	"அவையறிதல்"	"அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். "
712	"பொருட்பால்"	"அவையறிதல்"	"இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். "
713	"பொருட்பால்"	"அவையறிதல்"	"அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். "
714	"பொருட்பால்"	"அவையறிதல்"	"ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். "
715	"பொருட்பால்"	"அவையறிதல்"	"நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. "
716	"பொருட்பால்"	"அவையறிதல்"	"ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. "
717	"பொருட்பால்"	"அவையறிதல்"	"கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. "
718	"பொருட்பால்"	"அவையறிதல்"	"உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. "
719	"பொருட்பால்"	"அவையறிதல்"	"புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். "
720	"பொருட்பால்"	"அவையறிதல்"	"அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். "
721	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். "
722	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். "
723	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். "
724	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். "
725	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. "
726	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. "
727	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். "
728	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். "
729	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். "
730	"பொருட்பால்"	"அவையஞ்சாமை"	"உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். "
731	"பொருட்பால்"	"நாடு"	"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. "
732	"பொருட்பால்"	"நாடு"	"பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. "
733	"பொருட்பால்"	"நாடு"	"பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. "
734	"பொருட்பால்"	"நாடு"	"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. "
735	"பொருட்பால்"	"நாடு"	"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத "
736	"பொருட்பால்"	"நாடு"	"கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. "
737	"பொருட்பால்"	"நாடு"	"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. "
738	"பொருட்பால்"	"நாடு"	"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. "
739	"பொருட்பால்"	"நாடு"	"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. "
740	"பொருட்பால்"	"நாடு"	"ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. "
741	"பொருட்பால்"	"அரண்"	"ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். "
742	"பொருட்பால்"	"அரண்"	"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். "
743	"பொருட்பால்"	"அரண்"	"உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். "
744	"பொருட்பால்"	"அரண்"	"சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். "
745	"பொருட்பால்"	"அரண்"	"கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். "
746	"பொருட்பால்"	"அரண்"	"எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். "
747	"பொருட்பால்"	"அரண்"	"முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். "
748	"பொருட்பால்"	"அரண்"	"முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். "
749	"பொருட்பால்"	"அரண்"	"முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். "
750	"பொருட்பால்"	"அரண்"	"எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். "
751	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். "
752	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. "
753	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. "
754	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். "
755	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். "
756	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். "
757	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. "
758	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. "
759	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். "
760	"பொருட்பால்"	"பொருள்செயல்வகை"	"ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. "
761	"பொருட்பால்"	"படைமாட்சி"	"உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. "
762	"பொருட்பால்"	"படைமாட்சி"	"உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. "
763	"பொருட்பால்"	"படைமாட்சி"	"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். "
764	"பொருட்பால்"	"படைமாட்சி"	"அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. "
765	"பொருட்பால்"	"படைமாட்சி"	"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. "
766	"பொருட்பால்"	"படைமாட்சி"	"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. "
767	"பொருட்பால்"	"படைமாட்சி"	"தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. "
768	"பொருட்பால்"	"படைமாட்சி"	"அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். "
769	"பொருட்பால்"	"படைமாட்சி"	"சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. "
770	"பொருட்பால்"	"படைமாட்சி"	"நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். "
771	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். "
772	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. "
773	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. "
774	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். "
775	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. "
776	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. "
777	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. "
778	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். "
779	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். "
780	"பொருட்பால்"	"படைச்செருக்கு"	"புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. "
781	"பொருட்பால்"	"நட்பு"	"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. "
782	"பொருட்பால்"	"நட்பு"	"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. "
783	"பொருட்பால்"	"நட்பு"	"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. "
784	"பொருட்பால்"	"நட்பு"	"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. "
785	"பொருட்பால்"	"நட்பு"	"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். "
786	"பொருட்பால்"	"நட்பு"	"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. "
787	"பொருட்பால்"	"நட்பு"	"அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. "
788	"பொருட்பால்"	"நட்பு"	"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. "
789	"பொருட்பால்"	"நட்பு"	"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. "
790	"பொருட்பால்"	"நட்பு"	"இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. "
791	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. "
792	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். "
793	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. "
794	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. "
795	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். "
796	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். "
797	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். "
798	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. "
799	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். "
800	"பொருட்பால்"	"நட்பாராய்தல்"	"மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. "
801	"பொருட்பால்"	"பழைமை"	"பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. "
802	"பொருட்பால்"	"பழைமை"	"நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். "
803	"பொருட்பால்"	"பழைமை"	"பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. "
804	"பொருட்பால்"	"பழைமை"	"விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். "
805	"பொருட்பால்"	"பழைமை"	"பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். "
806	"பொருட்பால்"	"பழைமை"	"எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. "
807	"பொருட்பால்"	"பழைமை"	"அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். "
808	"பொருட்பால்"	"பழைமை"	"கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். "
809	"பொருட்பால்"	"பழைமை"	"கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. "
810	"பொருட்பால்"	"பழைமை"	"விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். "
811	"பொருட்பால்"	"தீ நட்பு"	"பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. "
812	"பொருட்பால்"	"தீ நட்பு"	"உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். "
813	"பொருட்பால்"	"தீ நட்பு"	"உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். "
814	"பொருட்பால்"	"தீ நட்பு"	"அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. "
815	"பொருட்பால்"	"தீ நட்பு"	"செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. "
816	"பொருட்பால்"	"தீ நட்பு"	"பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். "
817	"பொருட்பால்"	"தீ நட்பு"	"நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். "
818	"பொருட்பால்"	"தீ நட்பு"	"ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். "
819	"பொருட்பால்"	"தீ நட்பு"	"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. "
820	"பொருட்பால்"	"தீ நட்பு"	"எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. "
821	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. "
822	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். "
823	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. "
824	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். "
825	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. "
826	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். "
827	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். "
828	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. "
829	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. "
830	"பொருட்பால்"	"கூடாநட்பு"	"பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். "
831	"பொருட்பால்"	"பேதைமை"	"பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். "
832	"பொருட்பால்"	"பேதைமை"	"பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். "
833	"பொருட்பால்"	"பேதைமை"	"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் "
834	"பொருட்பால்"	"பேதைமை"	"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். "
835	"பொருட்பால்"	"பேதைமை"	"ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. "
836	"பொருட்பால்"	"பேதைமை"	"பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். "
837	"பொருட்பால்"	"பேதைமை"	"ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. "
838	"பொருட்பால்"	"பேதைமை"	"மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். "
839	"பொருட்பால்"	"பேதைமை"	"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். "
840	"பொருட்பால்"	"பேதைமை"	"கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். "
841	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. "
842	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். "
843	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. "
844	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. "
845	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். "
846	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. "
847	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. "
848	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். "
849	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. "
850	"பொருட்பால்"	"புல்லறிவாண்மை"	"உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். "
851	"பொருட்பால்"	"இகல்"	"இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பார஧க்கும் நோய். "
852	"பொருட்பால்"	"இகல்"	"பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. "
853	"பொருட்பால்"	"இகல்"	"இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். "
854	"பொருட்பால்"	"இகல்"	"இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். "
855	"பொருட்பால்"	"இகல்"	"இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். "
856	"பொருட்பால்"	"இகல்"	"இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. "
857	"பொருட்பால்"	"இகல்"	"மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். "
858	"பொருட்பால்"	"இகல்"	"இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. "
859	"பொருட்பால்"	"இகல்"	"இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. "
860	"பொருட்பால்"	"இகல்"	"இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. "
861	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. "
862	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. "
863	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. "
864	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. "
865	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. "
866	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். "
867	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. "
868	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. "
869	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். "
870	"பொருட்பால்"	"பகைமாட்சி"	"கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. "
871	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. "
872	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. "
873	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். "
874	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. "
875	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. "
876	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். "
877	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. "
878	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. "
879	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. "
880	"பொருட்பால்"	"பகைத்திறந்தெரிதல்"	"உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். "
881	"பொருட்பால்"	"உட்பகை"	"நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். "
882	"பொருட்பால்"	"உட்பகை"	"வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. "
883	"பொருட்பால்"	"உட்பகை"	"உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். "
884	"பொருட்பால்"	"உட்பகை"	"மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். "
885	"பொருட்பால்"	"உட்பகை"	"உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். "
886	"பொருட்பால்"	"உட்பகை"	"ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. "
887	"பொருட்பால்"	"உட்பகை"	"செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. "
888	"பொருட்பால்"	"உட்பகை"	"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. "
889	"பொருட்பால்"	"உட்பகை"	"எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. "
890	"பொருட்பால்"	"உட்பகை"	"உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. "
891	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. "
892	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். "
893	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. "
894	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். "
895	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். "
896	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். "
897	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். "
898	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. "
899	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். "
900	"பொருட்பால்"	"பெரியாரைப் பிழையாமை"	"இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். "
901	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. "
902	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். "
903	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். "
904	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. "
905	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். "
906	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். "
907	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. "
908	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். "
909	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். "
910	"பொருட்பால்"	"பெண்வழிச்சேறல்"	"எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். "
911	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். "
912	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். "
913	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று. "
914	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். "
915	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். "
916	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். "
917	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். "
918	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. "
919	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. "
920	"பொருட்பால்"	"வரைவின்மகளிர்"	"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. "
921	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். "
922	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். "
923	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. "
924	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. "
925	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். "
926	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். "
927	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 "
928	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். "
929	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. "
930	"பொருட்பால்"	"கள்ளுண்ணாமை"	"கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. "
931	"பொருட்பால்"	"சூது"	"வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. "
932	"பொருட்பால்"	"சூது"	"ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. "
933	"பொருட்பால்"	"சூது"	"உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். "
934	"பொருட்பால்"	"சூது"	"சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். "
935	"பொருட்பால்"	"சூது"	"கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். "
936	"பொருட்பால்"	"சூது"	"அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். "
937	"பொருட்பால்"	"சூது"	"பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். "
938	"பொருட்பால்"	"சூது"	"பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. "
939	"பொருட்பால்"	"சூது"	"உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். "
940	"பொருட்பால்"	"சூது"	"இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். "
941	"பொருட்பால்"	"மருந்து"	"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. "
942	"பொருட்பால்"	"மருந்து"	"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். "
943	"பொருட்பால்"	"மருந்து"	"அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. "
944	"பொருட்பால்"	"மருந்து"	"அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. "
945	"பொருட்பால்"	"மருந்து"	"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. "
946	"பொருட்பால்"	"மருந்து"	"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். "
947	"பொருட்பால்"	"மருந்து"	"தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். "
948	"பொருட்பால்"	"மருந்து"	"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். "
949	"பொருட்பால்"	"மருந்து"	"உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். "
950	"பொருட்பால்"	"மருந்து"	"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. "
951	"பொருட்பால்"	"குடிமை"	"இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. "
952	"பொருட்பால்"	"குடிமை"	"ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். "
953	"பொருட்பால்"	"குடிமை"	"நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. "
954	"பொருட்பால்"	"குடிமை"	"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். "
955	"பொருட்பால்"	"குடிமை"	"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. "
956	"பொருட்பால்"	"குடிமை"	"சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். "
957	"பொருட்பால்"	"குடிமை"	"குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. "
958	"பொருட்பால்"	"குடிமை"	"நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். "
959	"பொருட்பால்"	"குடிமை"	"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். "
960	"பொருட்பால்"	"குடிமை"	"நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

961	"பொருட்பால்"	"மானம்"	"இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். "
962	"பொருட்பால்"	"மானம்"	"சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். "
963	"பொருட்பால்"	"மானம்"	"பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. "
964	"பொருட்பால்"	"மானம்"	"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. "
965	"பொருட்பால்"	"மானம்"	"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். "
966	"பொருட்பால்"	"மானம்"	"புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. "
967	"பொருட்பால்"	"மானம்"	"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. "
968	"பொருட்பால்"	"மானம்"	"மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. "
969	"பொருட்பால்"	"மானம்"	"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். "
970	"பொருட்பால்"	"மானம்"	"இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. "
971	"பொருட்பால்"	"பெருமை"	"ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். "
972	"பொருட்பால்"	"பெருமை"	"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். "
973	"பொருட்பால்"	"பெருமை"	"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். "
974	"பொருட்பால்"	"பெருமை"	"ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. "
975	"பொருட்பால்"	"பெருமை"	"பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். "
976	"பொருட்பால்"	"பெருமை"	"சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும்
நோக்கு. "
977	"பொருட்பால்"	"பெருமை"	"இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். "
978	"பொருட்பால்"	"பெருமை"	"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. "
979	"பொருட்பால்"	"பெருமை"	"பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். "
980	"பொருட்பால்"	"பெருமை"	"அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். "
981	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. "
982	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. "
983	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். "
984	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. "
985	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. "
986	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். "
987	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. "
988	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். "
989	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். "
990	"பொருட்பால்"	"சான்றாண்மை"	"சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. "
991	"பொருட்பால்"	"பண்புடைமை"	"எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. "
992	"பொருட்பால்"	"பண்புடைமை"	"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. "
993	"பொருட்பால்"	"பண்புடைமை"	"உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. "
994	"பொருட்பால்"	"பண்புடைமை"	"யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. "
995	"பொருட்பால்"	"பண்புடைமை"	"நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. "
996	"பொருட்பால்"	"பண்புடைமை"	"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். "
997	"பொருட்பால்"	"பண்புடைமை"	"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். "
998	"பொருட்பால்"	"பண்புடைமை"	"நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. "
999	"பொருட்பால்"	"பண்புடைமை"	"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். "
1000	"பொருட்பால்"	"பண்புடைமை"	"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. "
1001	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். "
1002	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு "
1003	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. "
1004	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். "
1005	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். "
1006	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். "
1007	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. "
1008	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. "
1009	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். "
1010	"பொருட்பால்"	"நன்றியில்செல்வம்"	"சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. "
1011	"பொருட்பால்"	"நாணுடைமை"	"கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. "
1012	"பொருட்பால்"	"நாணுடைமை"	"ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. "
1013	"பொருட்பால்"	"நாணுடைமை"	"ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. "
1014	"பொருட்பால்"	"நாணுடைமை"	"அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. "
1015	"பொருட்பால்"	"நாணுடைமை"	"பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. "
1016	"பொருட்பால்"	"நாணுடைமை"	"நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். "
1017	"பொருட்பால்"	"நாணுடைமை"	"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். "
1018	"பொருட்பால்"	"நாணுடைமை"	"பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. "
1019	"பொருட்பால்"	"நாணுடைமை"	"குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. "
1020	"பொருட்பால்"	"நாணுடைமை"	"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. "
1021	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். "
1022	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. "
1023	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். "
1024	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. "
1025	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. "
1026	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். "
1027	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. "
1028	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். "
1029	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. "
1030	"பொருட்பால்"	"குடிசெயல்வகை"	"இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. "
1031	"பொருட்பால்"	"உழவு"	"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. "
1032	"பொருட்பால்"	"உழவு"	"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. "
1033	"பொருட்பால்"	"உழவு"	"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். "
1034	"பொருட்பால்"	"உழவு"	"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். "
1035	"பொருட்பால்"	"உழவு"	"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். "
1036	"பொருட்பால்"	"உழவு"	"உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. "
1037	"பொருட்பால்"	"உழவு"	"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். "
1038	"பொருட்பால்"	"உழவு"	"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. "
1039	"பொருட்பால்"	"உழவு"	"செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். "
1040	"பொருட்பால்"	"உழவு"	"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். "
1041	"பொருட்பால்"	"நல்குரவு"	"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. "
1042	"பொருட்பால்"	"நல்குரவு"	"இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். "
1043	"பொருட்பால்"	"நல்குரவு"	"தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. "
1044	"பொருட்பால்"	"நல்குரவு"	"இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். "
1045	"பொருட்பால்"	"நல்குரவு"	"நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். "
1046	"பொருட்பால்"	"நல்குரவு"	"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். "
1047	"பொருட்பால்"	"நல்குரவு"	"அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். "
1048	"பொருட்பால்"	"நல்குரவு"	"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. "
1049	"பொருட்பால்"	"நல்குரவு"	"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. "
1050	"பொருட்பால்"	"நல்குரவு"	"துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. "
1051	"பொருட்பால்"	"இரவு"	"இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. "
1052	"பொருட்பால்"	"இரவு"	"இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். "
1053	"பொருட்பால்"	"இரவு"	"கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. "
1054	"பொருட்பால்"	"இரவு"	"இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. "
1055	"பொருட்பால்"	"இரவு"	"கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. "
1056	"பொருட்பால்"	"இரவு"	"கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். "
1057	"பொருட்பால்"	"இரவு"	"இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. "
1058	"பொருட்பால்"	"இரவு"	"இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. "
1059	"பொருட்பால்"	"இரவு"	"ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. "
1060	"பொருட்பால்"	"இரவு"	"இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. "
1061	"பொருட்பால்"	"இரவச்சம்"	"கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். "
1062	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். "
1063	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். "
1064	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. "
1065	"பொருட்பால்"	"இரவச்சம்"	"தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில். "
1066	"பொருட்பால்"	"இரவச்சம்"	"ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். "
1067	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. "
1068	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். "
1069	"பொருட்பால்"	"இரவச்சம்"	"இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். "
1070	"பொருட்பால்"	"இரவச்சம்"	"கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். "
1071	"பொருட்பால்"	"கயமை"	"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். "
1072	"பொருட்பால்"	"கயமை"	"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். "
1073	"பொருட்பால்"	"கயமை"	"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். "
1074	"பொருட்பால்"	"கயமை"	"அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். "
1075	"பொருட்பால்"	"கயமை"	"அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. "
1076	"பொருட்பால்"	"கயமை"	"அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். "
1077	"பொருட்பால்"	"கயமை"	"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. "
1078	"பொருட்பால்"	"கயமை"	"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். "
1079	"பொருட்பால்"	"கயமை"	"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். "
1080	"பொருட்பால்"	"கயமை"	"எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. "
1081	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. "
1082	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. "
1083	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. "
1084	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். "
1085	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. "
1086	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். "
1087	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். "
1088	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. "
1089	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. "
1090	"காமத்துப்பால்"	"தகையணங்குறுத்தல்"	"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. "
1091	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. "
1092	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. "
1093	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். "
1094	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். "
1095	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் "
1096	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். "
1097	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. "
1098	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். "
1099	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. "
1100	"காமத்துப்பால்"	"குறிப்பறிதல்"	"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. "
1101	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. "
1102	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. "
1103	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. "
1104	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். "
1105	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்
தோள். "
1106	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். "
1107	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. "
1108	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. "
1109	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். "
1110	"காமத்துப்பால்"	"புணர்ச்சிமகிழ்தல்"	"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. "
1111	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். "
1112	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. "
1113	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. "
1114	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. "
1115	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. "
1116	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். "
1117	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. "
1118	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧. "
1119	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. "
1120	"காமத்துப்பால்"	"நலம்புனைந்துரைத்தல்"	"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். "
1121	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். "
1122	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. "
1123	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். "
1124	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. "
1125	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். "
1126	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். "
1127	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. "
1128	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. "
1129	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். "
1130	"காமத்துப்பால்"	"காதற்சிறப்புரைத்தல்"	"உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். "
1131	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. "
1132	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. "
1133	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். "
1134	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. "
1135	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். "
1136	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். "
1137	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். "
1138	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். "
1139	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. "
1140	"காமத்துப்பால்"	"நாணுத்துறவுரைத்தல்"	"யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. "
1141	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். "
1142	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். "
1143	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. "
1144	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. "
1145	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. "
1146	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. "
1147	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். "
1148	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். "
1149	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. "
1150	"காமத்துப்பால்"	"அலரறிவுறுத்தல்"	"தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். "
1151	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. "
1152	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. "
1153	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். "
1154	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. "
1155	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. "
1156	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. "
1157	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. "
1158	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. "
1159	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. "
1160	"காமத்துப்பால்"	"பிரிவாற்றாமை"	"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். "
1161	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். "
1162	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். "
1163	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. "
1164	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். "
1165	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். "
1166	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. "
1167	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். "
1168	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. "
1169	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா. "
1170	"காமத்துப்பால்"	"படர்மெலிந்திரங்கல்"	"உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். "
1171	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. "
1172	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். "
1173	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. "
1174	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. "
1175	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். "
1176	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. "
1177	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். "
1178	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். "
1179	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். "
1180	"காமத்துப்பால்"	"கண்விதுப்பழிதல்"	"மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. "
1181	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. "
1182	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. "
1183	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. "
1184	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. "
1185	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. "
1186	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. "
1187	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. "
1188	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். "
1189	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். "
1190	"காமத்துப்பால்"	"பசப்புறுபருவரல்"	"பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். "
1191	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. "
1192	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. "
1193	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. "
1194	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். "
1195	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. "
1196	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. "
1197	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். "
1198	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். "
1199	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. "
1200	"காமத்துப்பால்"	"தனிப்படர்மிகுதி"	"உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. "
1201	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. "
1202	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல். "
1203	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். "
1204	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். "
1205	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். "
1206	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன். "
1207	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். "
1208	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. "
1209	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. "
1210	"காமத்துப்பால்"	"நினைந்தவர்புலம்பல்"	"விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. "
1211	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. "
1212	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். "
1213	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். "
1214	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. "
1215	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. "
1216	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். "
1217	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. "
1218	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. "
1219	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். "
1220	"காமத்துப்பால்"	"கனவுநிலையுரைத்தல்"	"நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். "
1221	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. "
1222	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. "
1223	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். "
1224	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். "
1225	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. "
1226	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். "
1227	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். "
1228	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. "
1229	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. "
1230	"காமத்துப்பால்"	"பொழுதுகண்டிரங்கல்"	"பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். "
1231	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். "
1232	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். "
1233	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். "
1234	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். "
1235	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். "
1236	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. "
1237	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து. "
1238	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். "
1239	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். "
1240	"காமத்துப்பால்"	"உறுப்புநலனழிதல்"	"கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. "
1241	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. "
1242	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. "
1243	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். "
1244	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. "
1245	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். "
1246	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. "
1247	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. "
1248	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. "
1249	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. "
1250	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுகிளத்தல்"	"துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். "
1251	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. "
1252	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். "
1253	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். "
1254	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். "
1255	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. "
1256	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். "
1257	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். "
1258	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. "
1259	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. "
1260	"காமத்துப்பால்"	"நிறையழிதல்"	"நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். "
1261	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். "
1262	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. "
1263	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். "
1264	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. "
1265	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. "
1266	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. "
1267	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். "
1268	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. "
1269	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. "
1270	"காமத்துப்பால்"	"அவர்வயின்விதும்பல்"	"பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். "
1271	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. "
1272	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. "
1273	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. "
1274	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. "
1275	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. "
1276	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. "
1277	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. "
1278	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. "
1279	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. "
1280	"காமத்துப்பால்"	"குறிப்பறிவுறுத்தல்"	"பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. "
1281	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. "
1282	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். "
1283	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். "
1284	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. "
1285	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. "
1286	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. "
1287	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. "
1288	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. "
1289	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். "
1290	"காமத்துப்பால்"	"புணர்ச்சிவிதும்பல்"	"கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. "
1291	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. "
1292	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. "
1293	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். "
1294	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. "
1295	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. "
1296	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. "
1297	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. "
1298	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. "
1299	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. "
1300	"காமத்துப்பால்"	"நெஞ்சொடுபுலத்தல்"	"தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. "
1301	"காமத்துப்பால்"	"புலவி"	"புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. "
1302	"காமத்துப்பால்"	"புலவி"	"உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். "
1303	"காமத்துப்பால்"	"புலவி"	"அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். "
1304	"காமத்துப்பால்"	"புலவி"	"ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. "
1305	"காமத்துப்பால்"	"புலவி"	"நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. "
1306	"காமத்துப்பால்"	"புலவி"	"துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. "
1307	"காமத்துப்பால்"	"புலவி"	"ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. "
1308	"காமத்துப்பால்"	"புலவி"	"நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. "
1309	"காமத்துப்பால்"	"புலவி"	"நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. "
1310	"காமத்துப்பால்"	"புலவி"	"ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. "
1311	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. "
1312	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. "
1313	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. "
1314	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. "
1315	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். "
1316	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். "
1317	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. "
1318	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. "
1319	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. "
1320	"காமத்துப்பால்"	"புலவி நுணுக்கம்"	"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. "
1321	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு. "
1322	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். "
1323	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. "
1324	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. "
1325	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. "
1326	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. "
1327	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். "
1328	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. "
1329	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. "
1330	"காமத்துப்பால்"	"ஊடலுவகை"	"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். "